யாழ்.விமான கட்டணம் அதிகம்:விசாரணைக்கு குழு!


பெரும் பிரச்சாரங்களுடன் ரணில் அரசினால் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற விமானப்பறப்புக்களிற்கு அதிக கட்டணங்கள் அறவிடப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் நடைபெறவுள்ளது.

யுhழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்காக, பயணிகளிடம் இருந்து, விமான நிலைய வரியாகப் பெருந்தொகைப் பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு, இலங்கை அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்குப் பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரியாக, ஆறாயிரம் ரூபாயே அறவிடப்பட வேண்டிய நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து 12 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுவதாக, அரச அமைச்சர் டக்ளஸினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில், கடந்த ஆட்சியாளர்களால் தேர்தலை நோக்காகக் கொண்டு, யாழ்ப்பாணம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்ற போது, குறைந்த பறப்பு தூரத்தைக் கொண்ட சென்னைக்கான பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுகிறது.

ஆரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை, விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு,  நடவடிக்கை எடுப்பதற்கு, ஏகமனதாகத் தீர்மானித்ததாக,தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments