மீண்டும் காணாமல் போனோருக்கு விசாரணை குழுவாம்?


காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் மகிந்தவினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உட்பட அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் விரிவாக ஆராய்ந்து அதனடிப்படையில் கூடிய விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்கவுள்ளதாக கோத்தபாய அமைச்சரவை அறிவித்துள்ளது.

அதற்கான மேலுமொரு குழுவினை உடனடியாக அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அண்மையில் தன்னை சந்தித்த காணாமல் போனோரின் உறவினர்கள், தமது சார்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததாக டக்ளஸ் பேசிவருகின்றார்

ஆனாலும் அதனை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் நிராகரித்துள்ளன.

எனினும் இந்த விவகாரத்தினை தீராத பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்ற அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குகின்ற ஒரு சிறு பகுதியினரே தொடர்ந்தும் குழப்பங்களை மேற்கொண்டு வருவதாகவும் டக்ளஸ் விளக்கமளித்துவருகின்றார்.

அதேவேளை காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டக்ளஸ் அறிவித்துள்ளார்.

No comments