அதிரடி வெற்றியை பெற்றது இந்தியா

சுற்றுலா இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதலாவது போட்டி இன்று இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி நிர்ணயித்த 204 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று அபாரமான வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இந்திய அணி சார்பில் சிரேஷ் ஐயர் (58), லோகேஷ் ராகுல் (56), விராட் கோஹ்லி (45) ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஐஎஸ்.சோதி இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
நியூசிலாந்தின் துடுப்பாட்டம் –
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தமது 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து அபாரமாக 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணியின் சார்பில் கொலின் முன்ரோ 59 ஓட்டங்களையும், ரோஸ் ட்ரெய்லர் 54, ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியாவின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, சிவம் டுபே, ஜஸ்விந்தர் ஷஹால் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

No comments