அஜித் கப்ரால் மகிந்த தரப்பாலும் காப்பாற்றபடுகின்றார்?


நல்லாட்சி அரசாங்கத்தின் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் மட்டுமின்றி மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அவர்களும் மத்திய வங்கி பிணைமுறி வர்த்தக மோசடியில் சம்பந்தப்பட்டு இருப்பது உறுதிப்படுத்த பட்டு இருக்கிறது. கோட்டாபய ராஜபக்சே அவர்களின் 'Viyath Maga' அமைப்பின் மூத்த உறுப்பினரான அஜித் நிவார்ட் கப்ரால் மகிந்த ராஜபக்சே அவர்களின் பொருளாதார ஆலோசகராக இப்போது கடமையாற்றி வருகிறார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் பிணைமுறி குறித்து தொடர்ச்சியாக பேசி வந்த ராஜபக்சே குடும்பம் பிணைமுறி சம்பந்தமான கணக்காய்வு அறிக்கைகளை பாராளமன்றத்தில் முன் வைக்கவும் தயங்கி வருகிறது.

2015-2016 ஆண்டு காலப்பகுதியில் மட்டும் 6.6 பில்லியன் - 6.9 பில்லியன் பெறுமதியான நட்டம் ஏற்படுத்த பட்டு இருக்கிறது. இந்த காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜுனா மகேந்திரன் அவர்களின் மகனின் Perpetual Treasuries Ltd என்கிற தனியார் நிறுவனம் இந்த மோசடிகளால் சட்டவிரோதமாக இலாபம் சம்பாதித்து இருக்கிறது. இந்த மோசடிகள் பாராளமன்றத்தில் முன்வைக்க பட்ட போது தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களை முன் நிறுத்தி இந்த மோசடிகள் தொடர்பான ஆவணங்கள் தமிழில் தரப்படவில்லை என்பதை கரணம் காட்டி விவாதத்தை UNP அரசாங்கம் தடுத்து நிறுத்தி இருந்தது
அதேபோல மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தில் 2008-2014 ஆண்டு காலப்பகுதியில் (குறிப்பாக 2010-2012) 9 பில்லியன் ரூபா நட்டம் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்களால் ஏற்படுத்த பட்டு இருக்கிறது. இந்த காலப்பகுதியில் அஜித் நிவார்ட் கப்ரால் அவர்களின் உறவினர்கள் பலரும் பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட Primary Dealer ஆக இருந்த நிறுவனங்களின் இயக்குநர்களாகவும், மத்திய வங்கியின் மேற்பார்வையில் உள்ள வங்கிகளின் பணிப்பாளர்களாகவும் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது
1. அஜித் நிவார்ட் கப்ரால் அவர்களின் சகோதரி Shiromi Noel Wickremesinghe, Perpetual Capital Holdings நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்தார்

2.அஜித் நிவார்ட் கப்ரால் அவர்களின் சகோதரன் Amal Cabraal, Commercial Bank, இன் பணிப்பாளராக இருந்தார்
3. அஜித் நிவார்ட் கப்ரால் அவர்களின் சகோதரியின் கணவர் Ravindra Thambaiya DFCC Bank இன் பணிப்பாளராக இருந்தார்
4. அஜித் நிவார்ட் கப்ரால் அவர்களின் மைத்துனர் Nihal Fonseka, Commercial Bank,இன் மூத்த அதிகாரியாக இருந்தார்
ஏறத்தாழ 19 நிறுவனங்கள் இந்த மோசடி மூலம் மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு (EPF) மிக மோசமான நட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் . இந்த மோசடி பணம் மூலம் 118 பாராளமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. EPF என்பது 1.2 வைப்பை கொண்டுள்ளதோடு ஆண்டுதோறும் 1.2 மில்லியன் வட்டி வருமானம் உழைக்கும் நிதியம் ஆகும். இந்த நிதியத்திற்கு 18 மில்லியன் ஊழியர்களும் 85000 நிறுவன உரிமையாளர்களும் ஆண்டு தோறும் பங்களிக்கிறார்கள் .

No comments