கோத்தாவின் முடிவு குறித்து கண்காணிப்பகம் சாடல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதன் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாற்றுவது என்ற உறுதிப்பாட்டை இலங்கை அரசு பின்பற்ற வேண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை கடந்த ஆம் திகதி முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், புதிதாக நியமனம் பெற்றுள்ள ஏனைய அதிகாரிகளும் அண்மைக்காலமாக மனித உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் பெற்ற நன்மைகளை விரைந்து சீர்குலைக்கின்றனர் என சாடியிருக்கிறார்.

No comments