பின்தொடர்ந்தால் சட்டநடவடிக்கை! ஊடகங்களுக்கு ஹரி எச்சரிக்கை

அரச குடும்பத்திலிருந்து விலகி கனடா சென்று தங்களின் வாழ்க்கையைத் தொடங்கிய ஹரி மற்றும் மேகன் தம்பதிகளைப் பின்தொடர்ந்து
புகைப்படங்களை எடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரி ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் கனடா சென்ற ஹரி வான்கூவர் தீவில் உள்ள விக்டோரியா சொகுசு இல்லத்தில் குடியேறியுள்ளனர்.

கடனாவில் சென்றடைந்த ஹரி வானூர்தியில் இருந்து இறங்கும் மற்றும் செல்லும் படங்களை யாரோ புதரில் மறைந்திருந்து தொலைநோக்கி கொண்ட கமராங்களில் படங்களை எடுத்துள்ளர் என ஹரியின் சட்டவாளர்கள் தெரிவித்துள்ளன.

இதனால், ஆவேசம் அடைந்துள்ள ஹரி, தங்களை பின்தொடர்ந்து வந்தால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments