ஹெக் செய்யப்பட்ட அமேசான் உரிமையாளரின் கைபேசி

சவுதி இளவரசரால் ஹெக் செய்யப்பட்டது அமேசான் உரிமையாளரின் தொலைபேசி

அமேசான் நிறுவதின் உரிமையாளர் ஜெப் பெஸோஸின் கைபேசி சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்ததாக குற்றம்சாட்டிய
அமேசானுக்கு தற்போது சவுதி அரசு பதிலளித்துள்ளது.

உலகின் வளர்ந்து வரும் முன்னணி நிறுவனங்களுள் முக்கியமான நிறுவனம் அமேசான். உலக பணக்காரர்களின் வரிசையின் அமேசான் உரிமையாளர் ஜெப் பெஸோஸ் முன்னிலையில் உள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு அவரின் கைபேசியை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்து கார்டியன் செய்தியில் ” அமேசான் உரிமையாளர் ஜெப் பெஸோஸின் மொபைலுக்கு சவுதி இளவரசர் நட்பின் நிமித்தமாக வாட்ஸ் ஆப் தொடர்பில் இருந்தார். அப்போது அவரது மொபைலுக்கு சவுதி இளவரசர் ஒரு வீடியோ ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதன் மூலம் ஜெப் பெஸோஸின் கைபேசியில் உள்ள பல தகவல்கள் வெளியேற்றப்பட்டதாக ” அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் ஜெப் பெஸோஸின் பாதுகாப்பு பொறுப்பாளர் கூறுகையில் ” ஜெப் பெஸோஸின் மொபைலுக்கு சவூதி இளவரசர் அனுப்பிய வீடியோ மூலம் பல தகவல்கள் வெளியேற்றப்பட்டது, எங்களது விசாரணை அதிகாரிகளாலும், துறை வல்லுநர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

ஆனால் சவூதி இளவரசர் இப்படி பட்ட செயலை செய்யவில்லை என சவுதி அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இளவரசர் முகமது பின் சல்மான் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

No comments