இளவரசர் ஹரி மற்றும் மேகன் முடிவால் வேதனையில் அரச குடும்பத்தினர்!


பிரித்தானியா அரச குடும்ப மூத்த உறுப்பினர்கள் (Royal Family) பொறுப்புகளிலிருந்து விலகிவுள்ளதாக பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மேகன் நேற்றுப் புதன்கிழமை சமூக ஊடகத்தில் அறிவிப்பை விடுத்துள்ளனர்.

இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை தயார் படுத்துவதில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் இந்த அறிவிப்பால் றோயல் குடும்பத்தினர் மூத்தவர்கள் மனம் நொந்து போயுள்ளனர் என அறிக்கை விடுத்துள்ளனர்.

இச்செய்தி வெளியிடுவதற்கு முன்னர் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் எந்தவொரு பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள மூத்த அரச குடும்ப உறுப்பினர்களுடனும் (இராணி மற்றும் தந்தை) கலந்தாலோசிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இது ஒரு சிக்கலான முடிவு இதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அத்துடன் நீண்ட காலம் தேவை. இவர்களின் முடிவை புரிந்துகொள்ள முடிகிறது. இவர்கள் சில அரச கடமைகளை செய்யும் வேளை அவர்கள் தங்களுக்கு என ஒரு நிதி ரீதியாக ஒரு சுயாதீனமான தொண்டு நிறுவனத்தை அமைப்பார்கள் என அரச குடும்பம் நம்புகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரியும் மேகனும் நீண்ட உரையாடல்கள் மற்றும் விவாதங்களின் பின் இந்தத் தீர்மானத்தை தங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக எடுத்துள்ளனர்.

நவீன உலகில் அரச குடும்பத்தினருக்கு ஒரு புதிய பாதையை அவர்கள் உருவாக்க விரும்பம் கொண்டுள்ளனர்.

இவர்கள் பிரித்தானியாவிலும் அமொிக்காவிரும் தங்கள் நேரத்தை சரிமாக செலவழிக்கவும் நிதி விடயங்களையும் தனியே கையாளவும் விரும்பம் கொண்டுள்ளனர்.

அத்தோடு பிரித்தானிய அரசினால் அரச குடும்பத்திற்கு என  82 மில்லியன் பவுண்சுகள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால், தாங்கள் சொந்தமாக  சம்பாதிப்பதற்கு தடை உள்ளதாகவும்,தெரிவித்துள்ளனர்.

No comments