அதிரடிப்படையின் அதிரடி; 170 கிலோ கஞ்சா சிக்கியது

புத்தளம் – முந்தல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்பஞ போது 170 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றை பாலாவி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சோதனைக்கு உட்படுத்தியபோது மிக சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments