டக்ளஸின் தம்பிக்கும் கதிரை?


அமைச்சர்கள் தங்களின் உறவினர்களை அரச பதவிகளுக்கு நியமிப்பதை கோத்தபாயா ராஜபக்சே தடுத்து இருப்பதாக ராஜபக்சே குடும்ப ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.


ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சகோதரர் தயானந்தாவை பதவியில் வைத்திருப்பதாக தென்னிலங்கை சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை கடல் தொழில் அமைச்சில் கனேடிய தூதுவரை டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் தயானந்தா வரவேற்பதை அவை வெளியிட்டுள்ளன. தயானந்தாவிற்கு அமைச்சில் என்ன வேலை ? அமைச்சின் சொத்துக்களை கையாளுவதற்கு அனுமதி கொடுத்தது யார் ? இது அதிகார துஸ்பிரோயோகம் இல்லையா ? என அவை கேள்வி எழுப்பியுள்ளன.

ராஜபக்சே சகோதரர்கள் கூட தங்கள் அயலவர்கள் , நண்பர்கள் , உறவினர்கள் என பலரையும் அரச உயர் பதவிகளுக்கு நியமித்து வருகிறார்கள்.
அவர்களது பங்காளிகளான டக்ளஸ் போன்றவர்களும் அதனையே செய்வதாகவும் அவை தெரிவித்துள்ளன.

No comments