லிந்துலையில் பாரிய தீ

லிந்துலை பாமஸ்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரு கடைகளும் வீடொன்றும் லொரியொன்றும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளனவென லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பாமஸ்டன் பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டடத்தில் அமையப்பெற்றுள்ள வன்பொருள் கடை (ஹாட்வெயார்), மரத் தளபாட கடை, வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன், கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியும் தீக்கிரையாகியுள்ளது.

No comments