தீவக மக்களுக்காக கனடாவுடன் பேசினாராம் டக்கி

கனேடிய அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் ஆழ்கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறை சார்ந்தோரும் பயனடையும் வகையில் மேற்கொள்ளக் கூடிய செயற்றிடங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரக வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்ஹினொனுக்கும் இடையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று (22) சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பாகவும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தன்னுடைய வழிமுறைகள் தொடர்பாகவும் அமைச்சரினால் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து, இலங்கையின் கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடிச் செயற்பாடுகள் தொடர்பான தற்போதைய நிலைவரங்களை எடுத்துக் கூறிய அமைச்சர், குறித்த துறைகளின் அபிவிருத்தி தொடர்பான தன்னுடைய திட்டங்களைத் தெரிவித்ததுடன் அதற்கு, கனடிய அரசாங்கத்தின் உதவிகளையும் ஆலோசனைகளையும் வரவேற்பதாக தெரிவித்தார்.
அத்துடன் வட மாகாணத்தின் தீவகப் பிரதேசத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைப் காண்பதற்கும் கனடா உதவவேண்டும் என அவர் உயர்ஸ்தானிகரிடம் கோரியுள்ளார்.

No comments