என்னை முத்தமிட அழைத்தார் டிரம்ப் - பெண் நிருபரால் பரபரப்பு

அமொிக்க அதிபர் டொனால் டிரம்ப் முத்தமிட அழைத்தார் என ஃபொக்ஸ் தொலைக்காட்சி முன்னர் நிருபாராக இருந்த கர்ட்னி பிரையல் குற்றம்
சுமத்தியுள்ளார்.

இந்த முறைப்பாட்டினால் அமொிக்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

39 வயதுடைய கர்ட்னி பிறையல் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இப்புத்தகம் இவ்வாரம் வெளிவரவுள்ள நிலையில் அப்புத்தகத்தில் இவ்விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்பாக டிரம்ப் அமெரிக்க அழகி போட்டி நடத்தினார். அந்தப்போட்டியில் நான் ஒரு நடுவராக இருக்க விரும்பினேன். இதுதொடர்பாக டிரம்ப் தரப்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது டிரம்ப், நான் இன்னொரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு, அழகிப்போட்டியில் நடுவராக இருக்க முடியாது என்று கூறினார்.

அவர் எனது பணி தொடர்பான லட்சியங்கள் பற்றி விசாரித்தார். ஃபொக்ஸ் செய்திச் சேவையில் நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை வெகுவாக பாராட்டினார்.

தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது நீ ஒரு நாள் என் அலுவலகத்துக்கு வா, நாம் முத்தமிடலாம் என்று அழைத்தார்.

நான் அதிர்ந்து போனேன். உடனே, ‘‘டொனால்டு, நாம் இருவருமே திருமணம் ஆனவர்கள்’’ என கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டேன்.

அவரது அழைப்பு காரணமாக, டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, அது தொடர்பான செய்திகளை சேகரித்து வெளியிடுவது எனக்கு கடினமாக அமைந்தது. தன்னைப் பற்றி பாலியல் புகார்கள் கூறிய பெண்களை அவர் பொய்யர்கள் என்று கூறியது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நான் அவர்களை நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கர்ட்னி பிறையலின் இக்குச்சச்சாட்டுக்கு இதுவரை டிரம்ப் எக்கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments