தாமத்திற்கு நியாயம் கேட்டவர் அடித்துக்கொலை!


வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மேற்குலக நாடுகளிற்கு தப்பித்துச்சென்று அகதி அந்தஸ்த்து கோரும் கலாச்சாரம் ஓய்ந்தபாடாக இல்லை.மில்லியன் கணக்கில் அதற்கென பணத்தை பெற்றுக்கொள்ளும் தரகர்கள் அவ்வாறான அவாவில் செல்வோரை நட்டாற்றில் கைவிடுவதும் தொடர்கின்றது.

இந்நிலையில் ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38 ) என்ற இளைஞர் ஒருவர் கடந்த மார்கழி மாதம் 24 ம் திகதி துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்ட போது அழைத்து சென்ற முகவர் குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டில் இருந்து ஐரோப்பா எல்லை நாடான கிறீஸ் நாட்டுக்குள் நுழைய நீண்ட தூரம் கடும் குளிரில் நடைப் பயணமாக ஆறு ,மலை, காடுகள் கடந்து கிறீஸ் நாட்டு எல்லைக்குள் நுழைய வேண்டும் .குடியோறிகளை ஆள் கடத்தல் குழு அழைத்து செல்வது வழமையான விடயமாகும்.

இந்நிலையில் பயணம் தாமதிப்பது தொடர்பில் முரண்பட்ட ரஞ்சன் காட்டுப் பகுதிக்குள் வைத்தே சாகடிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே யாழ்ப்பாண பத்திரிகையாளர் அஸ்வின் அவ்வாறே கொலை செய்யப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments