முன்னாள் முதலமைச்சர் கூட்டு தயார்?


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிற்கான முன்னாள் முதலமைச்சரது கூட்டு 
பெரும்பாலும் தயாராகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சரது கூட்டினில் சி.வி.விக்கினேஸ்வரனுடன்,
பேராசிரியர் வி.பி.சிவநாதன்,அருந்தவபாலன் மற்றும் தற்பரன் பெயர்கள் வேட்பாளர் பட்டியலிலுள்ளது.

இதே வேளை பங்காளிகள் என்ற வகையில் ஈபிஆர்எல்எவ் 3 இடங்களையும் சிவாஜிலிங்கம் தரப்பு ஒரு இடத்தையும் அனந்தி ஒரு இடத்தையும் பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கட்சியொன்றின் பேரில் இக்கூட்டு களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே கடந்த 10 ஆண்டுகளுக்குள் இலங்கையில் 20 கட்சிகள் வரையில் புதிதாக உருவாகியிருக்கின்றன. தற்போது ஆட்சியிலிருக்கும் பொதுஜன பெரமுன உள்பட பல கட்சிகள் 2010 க்குப் பிறகு முளைத்தவையே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments