சானிக்கும் நாட்டைவிட்டு வெளியேற தடை!


ஏற்கனவே 700 இற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்துள்ள கோத்தபாய அரசு தற்போது முன்னாள் சிஐடி இயக்குனர் சானி அபேசேகராவையும் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது.இது தொடர்பில்  நுகேகொட  நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு அளித்த கோரிக்கையை பரிசீலித்து            நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி                                               உரையாடல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு அளித்த அறிக்கைகளை பரிசீலித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

No comments