குளித்தில் நீராடியவர் பலி

வழிப்போக்கராக திரிந்த 60 வயது முதியவர் ஒருவர் தென்மராட்சி – வரணி இடைக்குறிச்சி மேற்கு சின்ன கற்குழு குளத்தில் விழுந்து மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் (21) மதியம் இடம்பெற்றுள்ளது. 
வீதியால் சென்ற மக்கள் குறித்த முதியவர் குளிப்பதை கண்டனர். எனினும் சிறிது நேரத்தின் பின்னர் அவரின் உடைமைகள் குளக் கரையில் இருந்தது. முதியவரைக் காணவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட கிராம மக்கள் குளத்தில் இறங்கி தேடியபோது முதியவர் சடலமாக மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments