சர்வதேச காவல்துறையை உலுக்கிய வழக்கு! மெங்குக்கு 13 வருட சிறை!

சர்வதேச காவல்துறை அமைப்பை உலுக்கிய வழக்கில் கையூட்டுப் பெற்றதாக குற்றச் சாட்டப்பட்ட முன்னாள் சர்வதேச காவல்துறையின் தலைவர்
மெங் ஹோங்வேக்கு 13 வருடங்களுக்கு மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் பிரான்சிலிருந்து சீனாவிற்கு பயணம் செய்த ஓர்மர் தலைவர் மெங் ஹொங்வே கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் சீனாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மெங் கம்யூனிஸ்ட் கட்சியின பொது பாதுகாப்பு முன்னாள் துணை அமைச்சராக இருந்துள்ளார்.

சர்வசேத காவல்துறை அமைந்துள்ள பிரான்சில் இருந்து சீனாவுக்கு பயணம் செய்தபோது காணால் போயிருந்தார். பின்னர் கையூட்டு வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த ஆண்டு பிரான்சில் அவரது மனைவிக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது, அவரும் அவரது இரண்டு குழந்தைகளும் கடத்தல் முயற்சிகளின் இலக்குகளாக இருப்பார்கள் என்று அவர் அஞ்சியதால் அவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

மெங்கிற்கு 13 ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனையும், 2 மில்லியன் யுவான் ஆர்.எம்.பி (0 290,000) அபராதமும் விதிக்கப்பட்டதாக தியான்ஜின் முதல் இடைநிலை மக்கள் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் அவர் நடத்திய விசாரணையில், அவர் 2.1 மில்லியன் டாலர்களை கையூட்டாக வாங்கியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிமன்றம் தனது அந்தஸ்தையும் பதவிகளையும் "முறையற்ற நன்மைகளைப் பெற" பயன்படுத்தவும் கையூட்டைக் குவிக்கவும் பயன்படுத்தியதாகக் கூறியது.

நீதிமன்ற தீர்ப்பில் செவ்வாயன்று மெங் "அனைத்து குற்றவியல் உண்மைகளையும் உண்மையாக ஒப்புக்கொண்டார்" என்றும், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.

No comments