எலும்பும் தோலுமான சிங்கங்கள்! மனதை உருக்கும் புகைப்படங்கள் வெளியாகின!

உடலினால் மெலிந்து,எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி
வருகின்றன.

சூடானில் உள்ள கார்டோம் அல் குரேஷி (Khartoum’s Al-Qureshi) விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கங்களின் புகைப்படங்களே எனத் தெரியவந்துள்ளன.

சூடானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக இச் சிங்கங்களுக்கு உணவு வழங்காமையால் மெலிந்து எலும்பும் தோலுமாக வருவதற்கு காரணம் என கூறப்படுகிறது.

சூடான் அரசு சார்பாக நடத்தப்பட்டு குறிந்த விலங்கியல் பூங்காவில் இருக்கும் சிங்கங்களுக்கு கடந்த சில வாரங்களாகவே உணவு வழங்கப்படவில்லை எனவும் சரியான மருத்துவ வசதியும் கிடைக்கவில்லை எனவும் பூங்கா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மிகக் கொடிய நோயால் அந்த சிங்கங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றனர்.

சிங்கங்களின் புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டிருந்த ஓஸ்மான் சலி என்பவர், பாதிக்கபட்டுள்ள சிங்கங்களுக்கு உதவ முன்வாருங்கள் என கோரிக்கை விடுத்தார்.

அவரின் கோரிக்கையை அடுத்து, ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சிங்கங்களுக்கு உணவு கொடுத்தும் உரிய சிகிச்சை அளித்தும் உதவி வருகின்றனர். எனினும் 5 சிங்கங்களில், ஒரு சிங்கம் இறந்துவிட்டது என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

எலும்பும் தோலுமாகவும், முகத்தில் பல ஈக்கள் மற்றும் பூச்சிகளுடன் காணப்படும் சிங்கங்களின் புகைப்படங்கள், காண்போரையும் கண்ணீர் வரவழைக்கச்செய்கிறது என ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments