நாடாளுமன்றை அலறவைத்து சவால் விடுத்த ரஞ்சன் ராமநாயக்க

என் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமியுங்கள். நான் சவால் விடுக்கிறேன். நான் எதற்கும் தயார். என்னிடம் அத்தனை ஆதாரங்களும், அறிக்கைகளும் இருக்கின்றது. நாட்டுக்கு வெளியிலும் காட் டிஸ்க் இருக்கின்றது என்று ரஞ்சன் ராமநாயக்க எம்பி நாடாளுமன்றில் இன்று (21) இடித்துரைத்துள்ளார்.
மேலும்,
எனது தொலைபேசியை, கணணியை எடுத்துச் சென்ற பொலிஸார் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டனர். எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். வேண்டுமென நான் எதனையும் செய்யவில்லை. என்னால் யாரும் பாதிப்படைய கூடாது. எனது பாதுகாப்புக்காக நான் இவற்றை செய்தேன்.
அரசின் பக்கமிருந்து என்னிடம் பேசியோரின் விபரங்களை நான் இன்று இந்த சபையில் தைரியமாக சமர்ப்பிக்க விரும்புகிறேன். என்னிடம் அவர்களின் பிரச்சினைகளை சொன்ன அரச தலைவர் முதல், முக்கியமானவர்கள் அதில் உள்ளனர்.
பேசுவதை மறப்பவர்கள் செய்ததை மறுப்பவர்கள் இந்த நாட்டில் இருப்பதால் தான் நான் அனைத்தையும் ரெக்கோர்டிங் செய்தேன். சாட்சிக்காக அதனை வைத்திருந்தேற். கள்ளர்களை வீட்டுக்கு அனுப்ப நான் யாரிடமும் பேசியதில்லை. அவர்களை உள்ளே வைக்க நான் முயற்சி செய்தேன். என்னிடம் ஓடியோ மட்டுமல்ல வீடியோவும் உள்ளது. அவற்றை வெளியிடுவேன். சாட்சிகளை விலைக்கு வாங்க செய்யும் முயற்சிகளை நான் அறிவேன். இவற்றுக்கெல்லாம் பெரும் விலை பேசப்பட்டது. அவற்றை நான் சொல்வேன்.
பிணைமுறி மோசடியாளர்கள் என்னிடம் பேசியவையும் உள்ளன. தனியார் தொலைக்காட்சி உரிமையாளர்களின் விருப்புக்கமையவே செய்திகள் வெளியாகின்றன. தேர்தலை எதிர்பார்த்து நான் எதனையும் செய்யவில்லை. தனித்து நான் போட்டியிடுவேன். கட்டுப்பணம் கூட கிடைக்காமல் என்னை வீட்டுக்கு அனுப்பலாம்.நான் பொய் சொல்ல மாட்டேன். அது பல உண்மைகளை பொய்யாக்கி விடும்.
எனக்கு யாரிடமிருந்தும் நற்சான்றிதழ் தேவையில்லை. நான் அஞ்சமாட்டேன். போதைப்பொருள் பணத்தால் தொலைக்காட்சி நடத்தும் நபர்கள் அனைத்தையும் செய்கின்றனர். எனது இந்த செயற்பாட்டுக்கு ஆணைக்குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அது நல்லது. அப்படி செய்தால் நான் பைல்களோடு வருவேன்.
திருடர்களை பிடிக்க வந்த அரசை திருடர்கள் பிடித்துக் கொண்டனர். கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் என்னிடம் இல்லை. மஹிந்த பேசியது இருக்கின்றது. அமைச்சர்களின் மனைவிமார் என்னுடன் பேசியதையும் வெளியிடுங்கள். ஏன் அவற்றை வெளியிட மறுக்கிறீர்கள் ? கள்ளர்களுக்கு ஒழுக்கம் இல்லை.

No comments