தமிழ் மக்களுக்கு முக்கியம் சோறு கிடையாது; சீறிபாய்ந்தார் சிவிகே

தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீருமே முக்கியமானவை என்ற அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து முழுத் தமிழினத்தையும் கொச்சைப்படுத்துகின்றது என்று வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

கடந்த 14 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகப்பிரதானிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அவ்வாறு கூறியிருந்தார்.

தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக சோற்றுக்கும், தண்ணீருக்கும் போராடவில்லை. அரசாங்கத்தின் பொருளாதார தடை இருந்த காலத்திலும் தமிழர்கள் இந்த மண்ணில் வாழ்த்தவர்கள்.

தேர்தல் பிரச்சாரங்களுக்காக வடக்கிற்கு வந்திருந்த அவர் ஒருவேளை பிச்சைக்காரர்களை சந்தித்திருக்கலாம். அவர்கள் சோறும் தண்ணீரும் கேட்டிருப்பார்கள்.

மானமுள்ள தமிழன் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும் சோறும் தண்ணீரும் முக்கியமென்று கூற மாட்டான். - என்றார்.

No comments