இந்தியாவின் மௌனம் நீடிக்காது:சீ.வீ.கே.சிவஞானம்!


13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தொடர்ந்தும் இந்தியா மௌனமாக இருக்கமாட்டாதென நம்புவதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அண்மையில் மேற்குலக இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சீ.வி.கே.சிவஞானம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியப் பிரதமரை டில்லியில் சந்தித்தபோது 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்துமாறு கோரியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தது .
அதேவேளை இந்தியாவின் பிரபல்ய நாளிதழில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை வழங்கமுடியாது என தெரிவித்ததாக செய்திகளும் வெளியாகியிருந்தது. 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசியல் அமைப்பிலுள்ள ஒரு அம்சம் என்பதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுதான் தனது கருத்தைக் கூறியிருக்கின்றார். நான் இதைப்பற்றி பெரிய அளவில் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. இத்தகைய கூற்றுக்கள் கடந்த காலங்களிலும் பேசப்பட்டுதான் இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து பேசும்போது நாங்கள் பின்நோக்கிக் செல்கின்றோமா என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது.இந்தக் கருத்தைப் பற்றி அதிகம் அலட்டத்தேவையில்லை. குறிப்பாக 55 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் தான் என்ற சட்டம் பல்வேறு போராட்டங்கள் கோரிக்கைகளுக்குப் பின்னர் சிங்களமும் தமிழும் இந்த நாட்டின் மொழிகள் என அங்கீகரிக்கப்பட்டது. 

கோத்தாபயவின் குறித்த கருத்துக்கள் தொடர்பில் நாங்கள் அச்சமடையவே ஏமாற்றம் அடையவே தேவையில்லை. நாங்கள் தந்தை செல்வாவின் வழியில் இன்றுவரை எமது இலட்சியத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் குப்பையில் தூக்கிப் போடவேண்டும் என இப்போதுள்ளவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் அவ்வாறுதான் கூறுவார்கள் ஆனால் உலகத்தில் தரம் வாய்ந்த நிறுவனத்தைப் பற்றிக் கதைப்பதில் கவனம் வேண்டும் .அதனைக் குப்பைத்தொட்டியில் போடுவதற்கு இவர்கள் உருவாக்கினார்களா நாங்கள் இத்தகைய கதைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. 13 ஆவது திருத்தச்சட்டம் தான் எங்களுடைய அரசியல் தீர்வாக எந்தக் காலத்திலும் நாங்கள் கூறியதில்லை. 

இது எல்லாக்கட்சிகளுக்கும் பொருந்தும் 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லை என்றால் கூட பொருட்டாகவில்லை ஒரு சில விடையங்களை . வெளிப்படையாகப் பேசமுடியாத சூழலும் உள்ளது. 

இந்தியா எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கின்றது பிரதிபலிப்பைக் காட்டும் என்பதை நாங்கள் ஊகிக்கமுடியாது. ஆனாலும் இந்தியா குறித்த கருத்து தொடர்பில் பிரதிபலிக்கவேண்டிய தேவையுள்ளது. அது நிச்சயமாக நடக்கும் என்பதை எதிர்பார்க்கின்றோம்.

நாங்கள் அது தொடர்பில்பேசி முரண்பாட்டு நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. இந்தியா தன்னுடைய இராஜதந்திர வழியில் தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கையுள்ளது எனவும் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

No comments