ஷஹ்ரானுடன் நெருக்கம்; ஒருவருக்கு தடுப்பு

ஷஹ்ரான் ஹஷிமுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்ட நபரை மே 6ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (29) அன்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வைத்து கடந்த வருடம் கைதான குறித்த சந்தேக நபர் அண்மையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இருந்த போதிலும் தற்போது மீண்டும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்றத்திற்கு  அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டு விசாரணைக்காக  அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments