48 மணி நேரத்தில் உருவாகும் இராணுவ வைத்திய முகாம்

சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு, அவசர சிகிச்சை அளிப்பதற்காக, 48 மணி நேரத்துக்குள் இலங்கை இராணுவம் வைத்திய முகாம் ஒன்றை அமைத்து வருகின்றது.

தியத்தலாவையிலுள்ள இராணுவ வைத்தியசாலை வளாகத்தில், இந்த வைத்தியமுகாம் அமைக்கப்பட்டு வருகிறது.

இரண்டு அறைகள் கொண்ட இந்த வைத்திய முகாமில், சீனாவிலிருந்து வரும் மாணவர்கள் இரண்டு வாரங்கள் தங்கவைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவுள்ளனர்.

No comments