இந்த அரசின் மீதும் சந்தேகம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் தற்போதைய அரசு பின்வாங்குவதிலிருந்து சந்தேகம் எழுந்துள்ளது என்று ஜேவிபி எம்பி பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) இடம்பெற்  ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். மேலும்,

தற்போதைய அரசு எதிர்க்கட்சியாக இருந்த போது மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பரவலாக கருத்துக்களை கூறி வந்தது. ஆனால் தற்போது அது தொடர்பான கணக்காய்வு அறிக்கை தேவையற்றது என்று கூறுகின்றது.

இதன் மூலம் மத்திய வங்கி விவகாரத்தில் ராஜபக்ஷ தரப்பினரும் தொடர்பு பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுக்கின்றது.

எனவே மத்திய வங்கி பிணை முறி மோசடி பற்றிய கணக்காய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் சபாநாயகரிடம் வலியுறுத்துவோம்.

பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களை விடவும் தற்போதைய அரசாங்கமே அது தொடர்பிலான ஆவணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. 

No comments