சிறிசேவையும் பிடித்து உள்ளே போடுங்கள்

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று (23) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரோ அல்லது பொலிஸ்மா அதிபரோ அந்த தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியதில்லை. பெஜட் வீதி அரச மாளிகையில் சொகுசாக வாழ்ந்துவரும் முன்னாள் ஜனாதிபதியே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
சிறிசேனவுக்கு இப்போது ஜனாதிபதிக்கான சிறப்புரிமை இல்லை. எனவே அவரை கைது செய்யலாம். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றி தெரிந்து கொண்ட பின்னர் சிங்கப்பூருக்கு சென்று ஒளிந்து கொண்டவரே சிறிசேன. அவர் செய்த உயிர் வேள்வியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும் – என்றார்.

No comments