ஜதேக தலைவராகின்றார் சஜித்?


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு தெரிவித்து அக்கட்சியின் 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று (16) இரவு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்த விருப்பம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கூட்டத்துக்கு சமூகமளித்திருந்த 65 பாராளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் சஜித்துக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிவதற்கு விருப்புக் குறித்த கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியிலுள்ள பெரும்பான்மையினரின் கருத்துக்கு மதிப்பளித்து, தேவையான நடவடிக்கைகளை கட்சியின் சட்டத்தின்படி மேற்கொள்ள மத்திய செயற்குழுவையும், கட்சி மாநாட்டையும் கூட்டுமாறும் மத்தும பண்டார எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

No comments