கட்சிகளை பதிய அழைப்பு;புதிய கட்சிகளை பதிவு செய்து கொள்ள தமிழ் தரப்புக்கள் பலவும் காத்திருக்கின்ற நிலையில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிய கட்சிகள் தற்போது பதிவு செய்யப்படவுள்ளன.
தற்போது நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 70 கட்சிகள் கபணப்படுகின்றது.
எதிர்வரும் 20 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளது.

No comments