அமெரிக்க படைகள் இலங்கை வர கோத்தாவே காரணம்?


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது கைசாத்திட்ட எக்ஸா ஒப்பந்தம், இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமெனத் தெரிவித்த பாலித ரங்கே பண்டார எம்.பி, அமெரிக்கா, தனது யுத்தக் கப்பல்களை இலங்கையில் நிறுத்தும் நிலைமையும் வரலாமென எச்சரித்தார்.  
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரமே, புதிய அரசாங்கம் ஆட்சிப்பீடமேறியது. எனினும், அது கேள்விக்குறியாகவே உள்ளது. 
அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளதுள்ளன. அது மக்களின் வாழ்க்கை சுதந்திரத்தை பறிப்பதாகவே அமைந்துள்ளது என்றார். 

வரிகளைக் குறைப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் எந்தவொரு பொருளின் விலையும் இதுவரையிலும் குறைவில்லையெனத் தெரிவித்த அவர், பொய்யான் வாக்குறுதிகள் ஊடாக, தொடர்ச்சியாக ஆட்சியில் நீடிக்க முடியாது என்றார்.

No comments