கோத்தாவை சந்தித்த கூட்டமைப்பு: சிறுநீர் பிரச்சினையில்லை?



நேற்றைய நாடாளுமன்ற கூட்ட தொடரின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கோத்தபாயவுடன் நட்புறவை ஏற்படுத்த முண்டியத்தமை தென்னிலங்கை ஊடக வட்டாரங்களில் பரபரப்பாக்கியுள்ளது.

நேற்றைய தேனீர்விருந்தினை ஜேவிபி புறக்கணித்துவிட கூட்டமைப்பினர் ஆர்வமாக பங்கெடுத்திருந்தனர்.

அதிலும் கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு நேற்றைய தினமே கோத்தபாயவை நேரில் கண்டிருந்த அனுபவம் கிடைத்திருந்தது.

கோத்தபாயவை கண்டால் சிறுநீர் கழியுமென்ற சரவணபவன் முன்னதாக ஊடகங்கள் சார்பில் கோத்தாவை சந்தித்து தனக்கான சில சலுகைகளிற்கு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் எஞ்சிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெருக்கியடித்து கோத்தாவுடன் கைகுலுக்கி கொண்டனர். இதன் மூலம் எதிர்வரும் நாட்களிற்கான அடிக்கல்லை நாட்டிக்கொண்டுள்ளனர்.

No comments