போட்டுத்தள்ள ரணில்-ரஞ்சன் கூட்டு?


முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்கவும் பேசினர் எனக் கூறி, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள தொலைபேசி உரையாடல் ஒன்றின் ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும், சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்த ஒலிப்பதிவொன்று வெளியாகி பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள நிலையிலேயே இந்தக் புதிய குரல் பதிவும் வெளிவந்துள்ளது.

அதில், ராஜபக்ச அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகேயை சுட்டுக் கொலைசெய்யவதற்காக தான் துப்பாக்கிப் பயிற்சி மேற்கொண்டுவருகிறார் எனவும், சம்பவத்தை அரங்கேற்றிய பின்னர் தவறுதலாகத் துப்பாக்கி வெடித்துவிட்டது எனக் கூறி படுகொலை விசாரணையை முடிவுறுத்துமாறு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ரஞ்சன் ராமநாயக்க பேசிக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் இதுகுறித்து பொலிஸ்மா அதிபருடன் பேச்சு நடத்தி விசாரணைகளை முடிவுறுத்துவது தொடர்பிலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததைப் போன்று குரல் பதிவு காணப்படுகின்ற அதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தை செய்வதற்கான அனுமதியையும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கியுள்ளார் என்பது போலுவே அதில் உள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

No comments