பருத்தித்துறையில் பொலிஸ் மீது தாக்குதல்!


வடக்கில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ந்தும்; கட்டுப்படுத்த முடியாததொன்றாகியுள்ளது.

நேற்றைய தினமான திங்கட்கிழமை இரவு  குடத்தனை பொற்பதி பகுதிகளில் மணல் கொள்ளை நடைபெறுவதாக பருத்தித்துறை காவல்துறைக்;கு பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

தகவல் கிடைத்ததை தொடர்ந்து  போலீசார் வாகனத்தில் மணல் கொள்ளை நடந்த இடத்துக்குச் சென்று உள்ளனர்.அதேவேளை அங்கு நின்றவர்கள் பொலீஸ் வாகனத்திற்கு கற்களால் எறிந்துசேதம் ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அதேவேளை போலீசாரை கண்டதும் தாங்கள் பயணித்த மூன்று மோட்டார் சைக்கிள்களையும்  கைவிட்டு விட்டு ஓடி மறைந்துள்ளனர்.

இதனிடையே கைவிடப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து  சேர்த்துள்ளதுடன்  மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

No comments