டிரம்பின் திட்டம் ''ஒரு சதி'' அடியோடு நிராகரித்த பாலஸ்தீனியர்கள்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை "சதி" என்று பாலஸ்தீனியர்கள் நிராகரித்துள்ளனர்.

 இந்த திட்டம் ஒரு பாலஸ்தீனிய அரசையும், மேற்குக் கரை குடியேற்றங்கள் மீது இஸ்ரேலிய இறையாண்மையை அங்கீகரிப்பதை திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

 ஜெருசலேம் இஸ்ரேலின் "பிரிக்கப்படாத" தலைநகராக இருக்கும், ஆனால் பாலஸ்தீன தலைநகரம் "கிழக்கு ஜெருசலேமின் பகுதிகளை உள்ளடக்கும்" என்று திரு டிரம்ப் கூறினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை டிரம் விடுத்த அறிவிப்புக்கு பதிலளித்த பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், ஜெருசலேம் "விற்பனைக்கு இல்லை" என்றார்.

 "எங்கள் உரிமைகள் அனைத்தும் விற்பனைக்கு இல்லை, அவை பேரம் பேசுவதல்ல" என்று அவர் மேலும் கூறினார்.

No comments