தங்களுக்கு சொல்லிவிட்டுத்தான் ஈரான் தாக்கியது! ஒப்புக்கொண்ட இராக்;

ஈரான் புரட்சிப்படைத் தளபதியான காசிம் சுலைமானியைக் கொலை செய்ததற்குப் பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்க படை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக இராக் பிரதமருக்கு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில்  இராக் பிரதமரின் செய்தித் தொடர்பாளர்உண்மைகளைப் போட்டுடைத்துள்ளார் , “புதன் நள்ளிரவுக்குச் சற்று பிறகு ஈரானிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. அதாவது சுலைமானி கொலைக்கான பதிலடி தொடங்கியது அல்லது தொடங்கவிருக்கிறது” என்று ஈரான் தகவல் அளித்தது எனகூறியுள்ளார்.

No comments