அறுவைச் சிகிற்சை மூலம் பிரிக்கப்பட்னர் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்

ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் ஒட்டிப் பிறந்த இரு பெண்குழந்தைகள் அறுவைச்சிகிற்சை மூலம் இருவரும் தனித்தனியாக
பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சத்திரசிகிற்சை78 பேர் கொண்ட குழு நடத்திய அறுவை சிகிச்சையில் மார்பு மற்றும் அடிவயிற்றில் இணைந்த இரண்டு சகோதரிகள் வெற்றிகரமாக பிரித்துள்ளனர்.

இந்த அறுவைச் சிகிற்சை கடந்த நவம்பர் மாதம் அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவைச் சிகிற்சை மேற்கொள்ளப்பட்டு இன்று இரு குழந்தைகளும் நலத்துடன் இருப்பதாகவும் இன்றும் ஆறு வாரங்கள் சிகிற்சை பெற்ற பின்னர் அவர்கள் வீட்டுக்குச் செல்ல முடியும் என தேசிய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த குழுவுக்கு தலைமை தாங்கிய குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் இம்மானுவேல் அமே கூறியுள்ளார்.

இரட்டையர்களைப் பிரிப்பதற்கான அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தபோதும் அக்குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இவ்விடயத்தை அவர்கள் பொதுவெளியில் அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தால் நடத்தப்படும் சிறப்பு மையத்தில் பெண்கள் முதன்முதலில் வெற்றிகரமாக பிரிக்கப்படுகிறார்கள் என்று தேசிய மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் டாக்டர் தயோ ஹாஸ்ட்ரூப் சி.என்.என் செய்திச் சேவைக்கு மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments