இப்போது தமிழிற்கு முன்னுரிமையா:விமலிற்கு சவால்!


ஜனாதிபதி தேர்தல் காலத்தில் யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தமிழில் முன்னுரிமை வழங்கி பெயர்பலகை நாட்டியதாக குற்றஞ்சாட்டிய கோத்தா அணி மன்னாரில் தமிழிற்கு முன்னுரிமை வழங்கும் பெயர்பலகையினை திறந்து வைத்துள்ளமை தொடர்பில் சமூக செயற்பாட்டாளர்கள் நையாண்டி செய்துள்ளனர்.

மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட பனை அபிவிருத்திச்சபையின் பனம்தும்பு தொழிற்சாலையின் பெயர் பலகையினை அமைச்சர் விமல்வீரவன்ச திறந்து வைத்திருந்தார்.

தேர்தல் காலத்தில் தமிழ் முதலிடத்தில் இருப்பதாகவும் சிங்களம் இரண்டாம் மொழியாகிவிட்டதாகவும் இனவாத பிரச்சாரங்களை முன்னெடுத்தவர்களிவ் விமல்வீரவன்சவும் ஒருவராவார்.

இந்நிலையில் மன்னாரிற்கு பயணம் செய்த அவர் திறந்து வைத்த பெயர்பலகையினை அம்பலப்படுத்தி போலி மொழி விசுவாசத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.  

No comments