புகையிரதத்துடன் மோதி மரணம்?

யாழ்.பருத்தித்துறை பகுதியில் கடை எரிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், கொடிகாமத்தில் தனக்கு தானே தீ மூட்டியவாறு புகையிரதம் முன்பாக பாய்ந்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் 13ம் திகதி திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு கொடிகாமம் சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்பாக இடம் பெற்றுள்ளது

பருத்தித்துறையைச் சேர்ந்த இராஜசுந்தரம் இராஜசிங்கம் வயது 33 என்பவரே மரணமடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது

இந்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது

No comments