வெள்ளை வானை எனக்கும் தெரியும்:விக்கிரமபாகு?


மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள்  இடம்பெற்றது எனக்கும்  தெரியுமென விக்ரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிததுள்ளார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் என்னுடன் தொலைபேசியில் பேசியுமிருந்தார். எனவே மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் அத்தகைய சம்பவங்கள் எவையும் நடைபெறவில்லை என்று எவராலும் மறுத்துவிட முடியாது என்றும் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளைக் கண்டிக்கும் நோக்கில் இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வெள்ளை வேன் விவகாரம் தொடர்பில் அம்பலப்படுத்திய ராஜித சேனாரத்னவை சிறைக்குள் தள்ளி ஆபத்திற்குள்ளாக்கி, தொடர்ந்தும் வெள்ளை வான் கலாசாரத்தை நாட்டில் முன்னெடுத்துச் செல்லலாம் என்றும், ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் உடைத்தெறிந்துவிட்டு முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்று ஒருபோதும் கருதவேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா இதே கருத்தை வெளியிட்டதுடன் இதன் பின்னார் இருந்தவர்களையும் அறிந்திருப்பதாக தெரிவித்திருந்தார். 

No comments