மலையகத்தில் சுனாமி நினைவேந்தல்

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 15 ஆண்டு நிறைவடைந்திருப்பதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.254இற்கு ஆழிப் பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.
ஹற்றன் பொலிஸார், நகர வர்த்தகர்கள் மற்றும் ஹற்றன் டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் ஹற்றன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.

No comments