சுனாமி நினைவேந்தல் - பாசிக்குடா

சுனாமி ஆழிப்பேரலை உயிர்களை காவு கொண்டு பதினைந்து வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று (26) நாடலாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மரணமடைந்த 512 பேரின் நினைவாகவும் சுனாமியினால் மரணமடைந்தவர்களின் ஆத்மசாந்திக்காக வேண்டி விஷேட பிராத்தனை நிகழ்வு பாசிக்குடா கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை 09.25 மணிக்கு இடம் பெற்றது.
பாசிக்குடா மற்றும் கல்குடா பிரதேச மக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் கல்குடா தூய ஆரோக்கிய மாதா தேவால பங்குத்தந்தை பாதர் ஜே.எஸ்.மொறாயஸ், கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானஹே, கிராம சேவை உத்தியோகத்தர் கே.கிருஸ்னகாந் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது உயிர் நீத்தவர்களின் நினைவாக தீபங்கள் ஏற்றப்பட்டதுடன் கல்குடா தூய ஆரோக்கிய மாதா தேவால பங்குத்தந்தை பாதர் ஜே.எஸ்.மொறாயஸ் அவர்கலாள் விஷேட பிராத்தனையும் இடம் பெற்றது.

No comments