சஜித் தலைமையில் மீண்டும் போராட்ட களம்?


முன்னாள் அமைச்சர் சம்பிக்கையின் கைதை கண்டித்து கொழும்பில் மீண்டும் ஜக்கிய தேசியக்கட்சி பிரமுகர்கள் மற்றும் பங்காளிகள் களமிறங்கியுள்ளனர்.
ரணிலை புறந்தள்ளி  ஜக்கிய தேசியக்கட்சி தலைவர்கள் சஜித் தலைமையில் களமிறங்கிய முதலாவது போராட்டமாக இது பார்க்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சரும்,இராணுவ தளபதியுமான சரத்பொன்சேகா உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு
செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இரகசி பொலிஸார் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவினால் குடிவரவு குடியகழ்வு பணிப்பாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments