சம்பிக்க குறித்து பூஜித்திடம் விசாரணைக்கு உத்தரவு

கைது செய்யப்பட்ட சம்பிக்க ரணவக்க எம்பியின் கார் விபத்து தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் விளக்கமறியலில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் சிஐடி விசாரணை நடத்த நீதிமன்றம் இன்று (23) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சம்பிக்கவின் வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் இடம்பெற்ற 2016ம் ஆண்டு காலப்பகுதியில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்திர இருந்தார்.

இதன்போது சம்பிக்கவின் வாக்குமூலத்தை மறைக்க பூஜித் ஜயசுந்திர ஆத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments