மன்னாரில் அம்மாச்சி

மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம், இன்று (23) மாலை 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எம்.ஏ.சுகூர் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் நகர சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன்,  வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் தெய்வேந்திரன், வடமாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments