தை மாதத்துக்குள் 1000 ரூபாய்


மலையக மக்களின் தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு இந்த இடைக்கால அரசாங்கத்தில் வழங்கி வைப்பதற்கு தயாராக உள்ளதாக சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சொன்ன வாக்குறுதியின் படி 2020 ஆம் ஆண்டு தை மாதத்திற்குள் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தினால் முன்னேடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் ஒன்றான யாழ் கலாச்சார மத்திய மையத்தின் சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் திடீர் விஐயம் ஒன்றை மேற்கொண்டு பார்வையுற்றார்.

இதில் அங்கு இடம்பெறுகின்ற நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்ற கட்டிட அமைப்பிடங்கள், கலாசார மையங்கள், நவீன வசதிகளை கொண்ட கலையரங்குகள், போன்ற விடயங்களை அவதானித்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

No comments