பெண் ஊழியரை தாக்கிய நபருக்கு மறியல்

வவுனியா - பசார் வீதியில் அமைந்துள்ள சும்ரின் வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் பெண்ணை தாக்கிய சம்பவத்தில் நேற்றைு (21) கைதான குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரின் மகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பொருள் ஒன்றை உடைத்தமை தொடர்பில் குறித்த பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு குறித்த நபர் தாக்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் குறித்த நபரையும் குறித்த பெண்ணையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலை மேற்கொண்ட நபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (22) மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட சமயத்தில் சந்தேக நபர் சார்பில் 3 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆயராகி பிணை வழங்குமாறு தெரிவித்திருந்தனர். இதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்திருந்தனர். 

பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் குறித்த நபரை எதிர்வரும் மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

No comments