வெள்ளத்தில் சிக்கிய பஸ்; சாரதி, நடத்துனர் கைது

பொலன்னறுவை, மனம்பிட்டிய, கல்லேல்ல பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்னர்.
சந்தேக நபர்கள் பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து  எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கவனயீனமாக வாகனம் செலுத்தியமை மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (21) கைது செய்யப்பட்டனர்.
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிட்டிய கல்லேல்ல பகுதியில் குறித்த பஸ் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் அதில் 54 பயணிகள் பயணித்துள்ளனர்.

No comments