உள்ளே தள்ள முயற்சி!


சுவிஸ் பணியாளரை உள்ளே தள்ளுவதன் மூலம் சர்வதேச நாடுகளது வாயை மூட இலங்கை அரசு மும்மரமாகியுள்ளது.கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் ஊழியர், விரைவில் தான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருப்பதாக தெரிவித்துள்ளார்
பல நாட்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்கு வந்து சென்றபின்னர் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் வைத்து அவர் இதனை நண்பர்கள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு செல்லும் பொழுது தான் எந்த நேரமும் தடுத்து வைக்கப்படலாம் என்ற பயத்தில் அவர் இருப்பதாகவும் , பல சந்தர்ப்பங்களில் இது தொடர்பாக அவர் சத்தமாக கத்தி பேசுவதாகவும் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments