பிரியங்கா கொலை; சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை
இந்தியா - ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்து எரித்த சம்பவம் இந்தியாவையும் அண்டை நாடுகளையும் உலுக்கியது.
இந்நிலையில் குறித்த கொலை சந்தேக நபர்கள் நால்வரை பொலிஸார் நேற்று (05) இரவு சுட்டுக் கொன்றுள்ளனர்.
பெண்ணின் கொலை ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே நடந்துள்ளது. அங்கிருந்து அந்த பெண்ணின் உடலை பெங்களூர் - ஹைதராபாத் நெடுஞ்சாலைக்கு கொண்டு சென்று அங்கு வைத்து எரித்துள்ளனர்.
இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் பொலிஸார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்திருந்தனர்.
கொலையாளிகள் முகமது ஆரிப் (26), ஜொள்ளு சிவா (20), ஜொள்ளு நவீன் (20), சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு (20) என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்தர். அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதாகத் தெரிவித்து 4 பேரையும் பொலிஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.
வைத்தியரை கொன்று எரித்த இடத்திலேயே இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment