கைலாச கிளம்பும் சீமான்!

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் இன்று (புதன்கிழ்மை) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்பொழுது அவர், நாட்டில் குடியுரிமை கிடைக்கா விட்டால், கைலாசா நாட்டுக்கு போய்டுவேன் என தடாலடியாக கூறியுள்ளார்.

 மேலும் அங்கு உரையாற்றுகையில் நமக்கு ஒரு அரசாங்கம் அமைந்திருப்பது போல உலகத்துல எந்த இனத்துக்கும் இப்படி ஒரு அரசாங்கம் அமையாது. வரலாற்றில் பெரும் பிழையை தொடர்ச்சியாக செய்து வருகிறது அதிமுக அரசு. இந்த சட்டத்தை ஏன் எதிர்க்கல. எதிர்த்து வாக்கு செலுத்தியிருந்தால், இந்த மசோதாவே நிறைவேறியிருக்காது. கூட்டணி தர்மத்துக்காக ஆதரித்தோம் என ராமதாஸ் போன்ற ஒரு தலைவர் பேசியதை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது எனக் கூறினார். மேலும் புதிய குடியுரிமைச் சட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.

No comments