யாழ் விபத்தில் காயமடைந்தவர் பலி!

யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் விபத்துக்குள்ளான நபர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .
45 வயதுடைய குறித்த நபர், நேற்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் அலைந்து திரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பஸ்ஸில் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளார் .
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments